முதலில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் – இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட T2 முனையம்

Changi Airport/Facebook

2020 ஆம் ஆண்டு மே மாதம் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் T2 முனையத்தில் இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இரண்டு ஆண்டு பணிகளுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை அன்று (May 29) பயணிகளுக்காக T2 முனையம் மீண்டும் திறக்கப்பட்டது .புதுப்பிக்கப்பட்ட முனையத்தில் தானியங்கி குடியேற்ற இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலைய குழு தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் முனிச் நகரத்திலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் காலை 7:12 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட சாங்கி விமான நிலைய முனையம் T2-க்கு முதலில் வந்தடைந்தது.ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தரையிறங்கிய SQ327 விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் முனையத்தின் விசாலமான அமைப்பைக் கண்டு வியந்தனர்.

முனையத்தில் இருந்த விரைவான குடியேற்ற அனுமதியையும் பயணிகள் வரவேற்றனர்.புதிய தானியங்கி குடியேற்ற இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் குடியேற்ற அனுமதிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்று முனிச்சிலிருந்து திரும்பிய பயணி ஒருவர் தெரிவித்தார்.

மொத்தம் 34 தானியங்கி குடியேற்ற வாயில்கள் உள்ளன சாங்கி விமான நிலைய குழு தெரிவித்துள்ளது.முக பயோமெட்ரிக் மற்றும் கருவிழி அடையாளங்களைப் பதிவு செய்த சிங்கப்பூரர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கும் அவை சேவை செய்கின்றன.மற்ற 12 பாதைகளும் ஐசிஏ அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட முனையத்தின் புதிய தொழில்நுட்ப வசதிகளை பற்றி பயணிகள் பாராட்டினாலும் சிலர் முனையத்தில் சில வசதிகளை மேம்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.