என்ன ஒரு பக்கம் மட்டும் தான் இருக்கு ! – பேஸ்புக் பதிவில் எச்சரித்த வாடிக்கையாளர்

singapore florist

Teo என்பவர் தனது பிறந்த நாள் பரிசாக Seasons By Dahlia ,என்ற உள்ளூர் பூக்கடையில் உள்ள பூக்கூடையை இணைய தளத்திலிருந்து ஆர்டர் செய்து வரவழைத்தார். தான் ஆர்டர் செய்த பூக்கூடையை நேரில் பார்த்த Teo அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் ஆர்டர் செய்தது ஒரு கூடை பூக்கள் ஆனால் அவருக்கு கிடைத்தது அரைக் கூடை பூக்கள் ஆகும்.

Seasons By Dahlia கடையுடனான தனது அனுபவத்தை பற்றி பேஸ்புக் பதிவில் விவரித்துள்ளார். தான் அதிருப்தி அடைந்ததாக பேஸ்புக் இடுகையில் குறிப்பிட்டிருந்தார். பூக்கடைக்காரர்களின் தயாரிப்பு பற்றிய மதிப்பாய்வு பற்றி தெரிவிப்பதற்கு வேறு வழி எதுவும் இல்லை என்பதால் பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறினார். மேலும் Seasons By Dahlia-வில் இருந்து வாங்குவதற்கு முன்பு கவனமாக செயல்பட வேண்டும் என்று எச்சரித்தார்.

பூக்கடைகாரர்களின் விளம்பரத்தைப் பார்த்து தன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தனக்கென ஒரு மலர் கூடையை ஆர்டர் செய்த Teo “மாரிபோசா” என்ற அலங்கார கூடைக்கு S$108 சிங்கப்பூர் டாலர்களை செலுத்தியுள்ளார்.மலர் கூடை குறித்த விவரத்தை வாட்ஸ் அப் மூலம் பூக்கடைக்கு தெரிவித்த Teo-விடம் தவறுக்கு மன்னிப்பு கேட்டது.

மலர் கூடையை திரும்ப பெற்றவுடன் பணம் திருப்பிச் செலுத்தப்படும் என்று Teo-க்கு தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 29 ஆம் தேதி இடுகைக்கு பிறகு, ஏப்ரல் 30 ஆம் தேதியன்று இடுகையை நீக்குமாறு அவர்களிடம் இருந்து செய்திகள் வந்ததால் பேஸ்புக் பதிவை திருத்தியதாகவும் இல்லை எனில் அவர்கள் சட்ட நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்றும் கூறினார்.

“யாருடைய பணத்தையும் மோசடி செய்யும் நோக்கம் எங்களுக்கு அல்ல, மலர் கூடை வெளியே செல்லும் முன் சரி பார்க்காதது அவர்களின் தவறு ” என்று அவர்கள் தெரிவித்தனர்.விலை உயர்ந்த பூக்கள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அதிக விலைக்கு காரணம் என்று அவர்கள் கூறினர்