கம்போடியா துணை பிரதமருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook page

மூன்று நாள் அரசுமுறை பயணமாக கம்போடியா சென்றுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நேற்று (15/02/2022) தலைநகர் நோம் பென் (Phnom Penh) நகரில் கம்போடியா நாட்டின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சருமான பிராக் சோகோனை (Minister of Foreign Affairs and International Cooperation Prak Sokhonn) நேரில் சந்தித்துப் பேசினார்.

மசாஜ் பார்லரில் பணிபுரியும் பெண்களின் தவறான செயல்… கட்டாயப்படுத்தியதாக போலீசை அழைத்த இரு ஆடவர்கள்!

இச்சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். அதேபோல், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், வேளாண்மை, வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் கம்போடியாவின் துணை பிரதமர் பிராக் சோகோன் ஆகியோர் தலைமையில் இரு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சிங்கப்பூரில் கோவிட்-19 “ATM”… வேற லெவல் – அப்படி அதன் பயன் தான் என்ன?

இதனிடையே, கம்போடியா துணை பிரதமரை சிங்கப்பூருக்கு வருமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.

சிங்கப்பூரும், கம்போடியாவும் தூதரக உறவுகளின் 55- வது ஆண்டு நிறைவை 2020ல் கொண்டாடின என்பது குறிப்பிடத்தக்கது.