இந்திய பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Ministry Of Foreign Affairs, Singapore

இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, மார்ச் 1- ஆம் தேதி அன்று சென்றிருந்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரம் – நசுங்கிய கார்.. ஸ்தம்பித்த போக்குவரத்து

அதைத் தொடர்ந்து, டெல்லியில் ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter Page

அதன் தொடர்ச்சியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய கல்வி, திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜித் தோவல் ஆகியோரைத் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

வேலை அனுமதியில் புதிய நடைமுறை: வெளிநாட்டு ஊழியர்களை குறைப்பதே நோக்கம்

இந்த சந்திப்புக் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நெருக்கமான உறவுகளை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகள் குறித்து அவர்கள் பரந்த அளவிலான விவாதங்களை நடத்தினர்.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இந்தியா- சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையை சிங்கப்பூருக்கும், இந்தியாவிற்கும் டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் பகுதிகளில் ஒத்துழைக்க ஒரு நல்ல தளமாக மீண்டும் உறுதிப்படுத்தினர்.

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூரின் ‘PayNow’ மற்றும் இந்தியாவின் ‘UPI’ (Unified Payments Interface) ஆகியவற்றுக்கு இடையே சமீபத்தில் தொடங்கப்பட்ட நிகழ்நேர எல்லை தாண்டிய கட்டண முறைகள் இணைப்பை இரு அமைச்சர்களும் வரவேற்றனர். காலநிலை நடவடிக்கைக்கான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து வழிநடத்தும் சர்வதேச சோலார் கூட்டணியில் (International Solar Alliance- ‘ISA’) இணையும் சிங்கப்பூரின் விருப்பத்தையும் அமைச்சர் பாலகிருஷ்ணன் வெளிப்படுத்தினார்.” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்: யார் அவர் விசாரணை..

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, மார்ச் 3- ஆம் தேதி அன்று மாலை சிங்கப்பூருக்கு திரும்பினார் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.