சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Minister for Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இன்று (19/03/2022) முதல் வரும் மார்ச் 23- ஆம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன் (Bahrain), பாலஸ்தீனப் பகுதிகள் (Palestinian Territories) மற்றும் இஸ்ரேலுக்கு (Israel) அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் பயணம், மத்திய கிழக்கில் உள்ள பங்காளிகளுடன் சிங்கப்பூரின் நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தும்.

“சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுகாதார, தகவல் மற்றும் தொடர்பு அமைச்சகங்களின் நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஜாம் (Rahayu Mahzam) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்”. இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.