இன்று முதல் மூன்று நாட்களுக்கு மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இன்று (17/05/2022) முதல் மூன்று நாட்களுக்கு மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த இந்தியர்களின் குரலை முன்நிறுத்த FSIO -வை திறந்துவைத்த சிங்கப்பூர் அதிபர் யாக்கோப் – சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கான அமைப்பு

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மலேசியத் தலைவர்களுடனான இருதரப்பு உறவுகளை புதுப்பிக்கவும், வலுப்படுத்தவும் இன்று (17/05/2022) முதல் மே 19- ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, மலேசியாவின் மூத்த அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசைன் (Malaysian Senior Minister and Minister of Defence Dato’ Seri Hishammuddin Tun Hussein), மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அபதுல்லா (Malaysian Minister of Foreign Affairs Dato’ Sri Saifuddin Abdullah) மற்றும் பிற மலேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளார்.

மறுபடியும் முதலில் இருந்தா? – சிங்கப்பூரில் ஓமிக்ரோன் மாறுபாடுகள் பாதிக்கப்பட்ட மூன்று வழக்குகள்

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் மலேசியா செல்லவுள்ளனர்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.