சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு இரவு உணவு விருந்தளித்த துருக்கி அமைச்சர்!

Photo: Ministry Of Foreign Affairs, Singapore

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (25/06/2022) முதல் துருக்கியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

துரியன் பழங்களை திருடும் வீடியோ இணையத்தில் வைரல் – சி.சி.டி.வி.யால் சிக்கிய நபர்

தலைநகர் இஸ்தான்புல்-க்கு (Istanbul) சென்ற அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு துருக்கி நாட்டின் அரசு உயரதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று (25/06/2022) அங்காராவில் (Ankara) துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் சாவுசோக்லுவை (Turkish Minister of Foreign Affairs Mevlüt Çavuşoğlu) சந்தித்தார்.

சிங்கப்பூருக்கும், துருக்கிக்கும் இடையே உள்ள அன்பான உறவுகளை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். துருக்கி விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதை விரிவுபடுத்துவது உட்பட வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர்.

எல்லாருக்கும் சோதனை செய்ய வேண்டும், சுகாதார அமைச்சகம் அறிவிப்பு – அப்படி என்ன நோய் வந்துள்ளது?

ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சந்திப்பில் துருக்கியின் விரிவாக்கும் மூலோபாய பங்கு மற்றும் மைய நிலை குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர். உக்ரைனின் நிலைமை உள்ளிட்ட புவிசார் மூலோபாய வளர்ச்சிகள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்களை பாதுகாப்பான ஏற்றுமதிக்கு வசதியாக தீர்வு காண துருக்கி மேற்கொண்ட முயற்சிகளை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

பின்னர், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இரவு உணவு விருந்தளித்தார். இதில், இரு நாடுகளின் வெளியுறவுத்துறையின் அரசு உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.