ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Meeting between Singapore Minister for Foreign Affairs Dr Vivian Balakrishnan and UAE Minister of Foreign Affairs and International Cooperation His Highness Sheikh Abdullah Bin Zayed Al Nahyan (Photo Credit: Office of the Foreign Minister, UAE)

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (United Arab Emirates- ‘UAE’) சென்றுள்ளார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்கள், தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

உணவகங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேர் வரை குழுவாக சாப்பிட அனுமதி!

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, நேற்று (24/03/2022) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யான்னை (UAE Minister of Foreign Affairs and International Cooperation His Highness Sheikh Abdullah Bin Zayed Al Nahyan) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர், நேரில் சந்தித்து பேசினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்!

சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்துக் கொண்டனர் மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்தும் அமைச்சர்கள் ஆழமான கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். தொற்றுநோய் இருந்தபோதிலும் எக்ஸ்போ 2020 துபாயை (Expo 2020 Dubai) வெற்றிகரமாக நடத்தியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பாராட்டினார். இதனிடையே, அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு மதிய உணவு விருந்து அளித்து உபசரித்தார்.

அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், அபுதாபி நிர்வாக விவகாரங்கள் ஆணையத்தின் தலைவரும், முபதாலா முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கல்டூன் கலீஃபா அல் முபாரக்கை (Chairman of the Abu Dhabi Executive Affairs Authority and Managing Director and Group CEO of Mubadala Investment Company His Excellency Khaldoon Khalifa Al Mubarak) சந்தித்தார். அவர்கள் தொற்றுநோய் மீட்பு பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.