கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஊழியர் மரணம் – சமீபத்தில் மட்டும் 2 ஊழியர்கள் பலி

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

சிங்கப்பூரில் ஜன்னல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 69 வயது ஊழியர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த விபத்து நவம்பர் 26 அன்று மாலை 6 மணியளவில் நடந்தததாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

ஹோம் க்ளீன்ஸ் கிளீனிங் மற்றும் லாண்டரி சர்வீசஸ் (Home Cleanz Cleaning & Laundry Services) நிறுவனத்தில் பணிபுரிந்தவர் அவர்.

ஜூரோங் தீவில் வெளிநாட்டு ஊழியர் கடலில் விழுந்து பலி

சிங்கப்பூர் ஊழியரான அவர், Hilltops கூட்டுரிமை – 99 கெய்ர்ன்ஹில் சர்க்கிளில் உள்ள காலி வீட்டில் துப்புரவு சேவைகளை மேற்கொண்டு இருக்கும்போது கீழே விழுந்தார்.

வெளிப்புற ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த அவர், 9 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் என்பது கூடுதல் தகவல்.

கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு விபத்துக்கள் நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.

இதன் மூலம் 2022ல் நடந்த வேலையிட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இன்னொரு ஊழியர் கடலில் விழுந்து இறந்தார், அவர் இந்திய நாட்டவர். link

வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்