வெளிநாட்டு ஊழியர்களை நிராகரிக்கிறதா சிங்கப்பூர்…?

(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தொழில் நிபுணர்களை சிங்கப்பூர் ஒருபோதும் நிராகரிக்கவில்லை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

ஆனால், மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளில் அவர்கள் பணியாற்றுவதை உறுதிசெய்வதற்கான ஆய்வை மேற்கொள்வதாக அமைச்சர் வோங் தெரிவித்தார்.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வலுவான வெளிநாட்டு ஊழியர் கொள்கை என்பது, ஊழியர்கள் போதுமான அளவு எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அளவீடு என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த வெளிநாட்டுத் ஊழியர் கொள்கையின் மாற்றங்கள் தொழில்நுட்ப ஊழியர்களின் வருகையை தடுக்கவில்லை, மேலும் அவர்களை வேலைவாய்ப்பு அனுமதியின் கீழ் வேலைக்கு அமர்த்தலாம் என்றும் வோங் கூறினார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் அனைத்து நிறுவனங்களும் உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தகுதிச் சம்பளமாக மாதத்திற்கு S$1,400 செலுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் 2022 உரையில் இதனை அதிகாரபூர்வமாக வோங் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் உள்ளூர் ஊழியரணியை வலுப்படுத்துவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, அரசாங்கம் கவனம் செலுத்தும் நடைமுறைகளில் இதுவும் ஒன்று.

வெளிநாட்டு ஊழியர்களை எடுத்தால், சிங்கப்பூர் ஊழியர்களுக்கு S$1,400 சம்பளம் – அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயம்!