8 பேருக்கு வலைவீசி $27,000 சுருட்டிய பெண் – கண்டிப்பான சிங்கப்பூரில் இப்படியெல்லாம் நடக்குதா?

8 பேரை ஏமாற்றி மொத்­தம் $27,000க்கும் மேற்­பட்ட தொகையைச் சுருட்­டி­ய­தா­கக் கூறப்­படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கு 31 வயதாகிறது. வாடகை மோசடி தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­படும் என்று காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

ஈசூ­னில் வாடகை வீடு ஒன்றை எடுத்து தரு­வ­தா­கக் கூறி $5,400 ஏமாற்றி­விட்­ட­தாக ஒரு­வர் அளித்த புகாரை தொடர்ந்தே அப்பெண் கைது செய்யப்பட்டார்.

இதே போல இன்னொரு வழக்கில் மற்றொரு பெண், ஒரு ஆணிடம், “உங்களால் தான் நான் கரப்பமடைந்து இரண்டை குழந்தை பெற்றேன்” என கூறினார்.

அதனை நம்பிய ஆண் $300,000க்கும் மேற்­பட்ட தொகையை அப்பெண்ணுக்கு கொடுத்­தார்.

முதலில், 2019 ஆகஸ்ட்­டில் தான் கர்ப்­ப­மாக இருப்­ப­தா­க­வும் இரட்டை பிள்ளை­களைச் சுமப்­ப­தா­க­வும் அந்த ஆணிடம் கூறி­னார்.

2020ல் பிறந்த அந்த இரட்டை பிள்­ளை­க­ளுக்கு அந்த ஆண்தான் தந்தை என்று அடுத்த இரண்­டாண்டு கால­மாக தெரிவித்தார்.

இருந்தும் அந்த ஆண் தன் பிள்­ளை­க­ளுக்குத் தந்தை என்­பதை ஒப்­புக்­கொள்­ள­வில்லை. அதே­வேளை­யில், மருத்­துவச் செல­வுக்­காக அவர், $314,000 தொகையை அந்த பெண்ணுக்கு  கொடுத்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.