வூஹான் வைரஸ் குறித்த சிங்கப்பூரின் முன்னெச்சரிக்கை ஆலோசனை காணொளி தமிழில்…!

Wuhan Virus : Taking Precautions (Photo: Gov.sg)

Singapore government released video about corona virus : சீனாவில் உருவாகியுள்ள கோரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, சிங்கப்பூரில் மொத்தம் 13 பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (ஜன. 30) உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் தமிழ், ஆங்கிலம், சீன, மலாய் ஆகிய நான்கு மொழிகளில் அறிவிப்பு வெளியிட்டு மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு காணொளியை சிங்கப்பூர் வெளியிட்டுள்ளது.

அதில் சீனாவில் பரவி பெரும் நொவல் கொரரோனா கிருமித்தொற்றை கருத்தில் கொண்டு ஹூபே மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படி சுகாதார அமைச்சு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://youtu.be/NN5pnPQW2-4

விழிப்புணர்வு ஆலோசனைகள்:

  • நீங்கள் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டால் தயவு செய்து உங்கள் சுகாதார நலனில் தொடர்ந்து கவனம் செலுத்தவும்.
  • நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் கோழி பறவைகள் உள்ளிட்ட உயிர் உள்ள விலங்குகள் உடனான தொடர்பை தவிர்க்கவும்.
  • பதனிடப் படாத மற்றும் முழுமையாக சமைக்கப்படாத இறைச்சி வகைகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
  • கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது உடல் நலம் குன்றி அவர்களுடனான நெருங்கிய தொடர்பை தவிர்க்கவும்.
  • உங்கள் கைகளை அடிக்கடி சவர்க்காரம் (Soap) பயன்படுத்தி கழுவும்
  • உங்களுக்கு இருமல் அல்லது சளி இருந்தால் முக கவசம் அணிந்து கொள்ளவும்.
  • உங்களுக்கு உடல் நலமின்றி இருந்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்கவும்.
  • பயணிகள் அனைவரும் சிங்கப்பூர் திரும்பியதும் இரண்டு வாரங்களுக்கு தங்கள் உடல் நலத்தை அணுக்கமாக கண்காணிக்கவேண்டும்.
  • அவர்கள் தங்களுக்கு உடல் நலம் இல்லை எனில் உடனடியாக ஒரு மருத்துவரை பார்த்து தங்கள் பயண விவரங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.
  • பொதுமக்கள் குறிப்பாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் ஆக அண்மைத் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.