‘டோங்கோ நிவாரணப் பணிகளுக்கு 50,000 அமெரிக்க டாலரை வழங்கும் சிங்கப்பூர்’!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

பசிபிக் பெருங்கடலையொட்டி உள்ள டோங்கோ நாட்டில் கடந்த ஜனவரி 15- ஆம் தேதி அன்று ஹூங்கோ டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியிலிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் சுனாமியும் ஏற்பட்டது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியினால் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

தொழிற்துறை கட்டிடத்தில் வரி செலுத்தப்படாத 500 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் பறிமுதல் – இருவர் சிக்கினர்

தண்ணீரில் எரிமலை சாம்பல் கலந்துள்ளதால், சுத்தமான குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக தகவல் கூறுகின்றன. அதேபோல், தகவல் தொடர்பு வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டோங்கோ நாட்டிற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, டோங்கோ நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபெகிடமோலோவா கட்டோவாவுக்கு (Tonga Minister for Foreign Affairs Fekitamoeloa Katoa) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் பிப். 1 முதல் இதில் கலந்துகொள்ள அனுமதி

அந்த கடிதத்தில், “டோங்கோவில் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் குறித்து நான் வருத்தமடைகிறேன். இந்த வரலாறு காணாத பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், டோங்கோ மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டோங்கோவின் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சிங்கப்பூர் அரசாங்கம் 50,000 அமெரிக்க டாலரை (67,221.75 சிங்கப்பூர் டாலர்) நன்கொடையாக வழங்கும். இந்த இக்கட்டான நேரத்தில் டோங்கோவுடன் சிங்கப்பூர் உறுதுணையாக நிற்கிறது. டோங்கோ மக்கள் இந்த பேரழிவை வலிமையுடனும், துணிச்சலுடனும் சமாளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவின் 73- வது குடியரசுத் தினம்- சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாட்டம்!

டோங்கோ செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (Tongan Red Cross) சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (Singapore Red Cross- ‘SRC’) அளித்துள்ள உறுதிமொழியான 50,000 சிங்கப்பூர் டாலர் மூலம் இந்தப் பங்களிப்பு துணைபுரியும். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது நிதி திரட்டும் முயற்சிக்கு விதைப் பணமாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.