அப்போ சிங்கப்பூரில் இவங்களை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிப்பதில்லையா? சபிக்கப்பட்ட ஊழியர்களின் நிலை!

பிளாட்­ஃபார்ம் ஒர்க்­கர்ஸ் எனப்படும் உணவு விநோயோகம் செய்யும் ஊழியர்கள், தனியார் வாகன ஓட்டுநர்களுக்கான விதிமுறைகள் முறையாக வகுக்கப்படவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே, சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கான இழப்பீடு பெறுவது கடினம்.

அவர்களுக்கு பணிக்­கா­லக் காய இழப்­பீட்­டுச் சட்­டத்­தைப் பயன்­ப­டுத்த இய­லுமா என்­பது குறித்து ஆராய ஓர் ஆலோ­ச­னைக் குழு அமைக்­கப்­பட்­டது.

தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள், விநி­யோக ஊழி­யர்­கள் போன்ற பணித்­தள ஊழி­யர்­கள், வரு­மா­னத்­திற்­குப் பெரும்­பா­லும் இணைய வழியில் வரும் வேலைகளையே நம்­பி­யி­ருக்­கின்­ற­னர். அவர்­கள் பணிக்­கா­லக் காய இழப்­பீட்­டுச் சட்­டம் அல்­லது வேலை­வாய்ப்­புச் சட்­டத்­தின்­கீழ் வரு­வ­தில்லை.

அதனால் இழப்பீடு முதற்கொண்டு கிடைப்பதில்லை.

ஆனால், அது போன்ற வேலைகளில் உள்ள கட்­டுப்­பா­டு­களை­ பார்க்­கும்­போது, உண்­மை­யில் அவர்­களும் ஊழி­யர்­கள் போன்­ற­வர்­கள்­தான் என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ பூ கூன் குறிப்­பிட்­டார்.

ஆத­லால், மக்­க­ளுக்கு ஒரே­வி­த­மான சேவை­களை வழங்­கும் பட்­சத்­தில், விநி­யோ­கப் பணியை மேற்­கொள்­ளும் ஓர் ஊழி­ய­ரை­யும் விநி­யோ­கப் பணித்­தள ஊழி­ய­ரை­யும் வெவ்­வே­றா­கப் பார்க்க முடி­யாது என்பதை ஆலோ­சனைக் குழு கருத்தில்­கொண்­டுள்­ள­தாக தெரி­வித்­தார்.