மரண தண்டனையை நீக்க சிங்கப்பூர் மறுப்பது ஏன்? இம்மி பிசறினாலும் தூக்குதான்!

events assemblies applications rejected spf
File Photo : Singapore Police

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. நடப்பாண்டில் இதுவரை 4 பேர் போதைப் பொருள் கடத்தலுக்காக அங்கு தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

மரணதண்டனை வேண்டாம் என உலக நாடுகள் கோரிக்கை வைத்தாலும்,  சிங்கப்பூர் அரசாங்கம் ‘சட்டத்தை மீறும் அளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கு தூக்கு’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் சிங்கப்பூர் குடிமக்களுடன், அந்நாட்டில் வசிப்பவர்களில் பெரும்பாலானோரும்கூட அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக உள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தபட்ட ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன.

உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன.

இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டுமே போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுகின்றன என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டுகிறது.

போதைப்பொருள் அற்ற கலாசாரம், சமூகத்தை உருவாக்குவதில், இந்த நடவடிக்கைதான் தம் குடிமக்களை தற்காக்கும் முதல் அம்சம் என்கிறது அரசு.

இதற்குப் பதிலளித்துள்ள சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்டங்களால் பல்லாயிரம் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாகக் கூறியுள்ளார்.