சிங்கப்பூரில் வேலையில் சேர்க்கப்படும் வெளிநாட்டு செவிலியர்கள்! – பணிச்சுமையைக் குறைக்க சிறந்த வழி!

nurses shortage in johor

சிங்கப்பூரின் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக,அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 4000 புதிய செவிலியர்கள் வேலையில் சேர்க்கப்படுவர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

இது சிங்கப்பூரில் தற்போதுள்ள செவிலியர்களின் எண்ணிக்கையில் பத்து சதவீதம் ஆகும்.கடந்த ஆண்டு 3300 புதிய செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்று திரு.ஓங் கூறினார்.

கோவிட்-19 தொற்றுப் பரவலின் போது வெளிநாட்திலிருந்து செவிலியர்களை வேலைக்குச் சேர்ப்பது குறைந்ததால்,அதற்கு ஈடுகட்டும் வகையில் அடுத்தாண்டு சேர்க்கப்படும் செவிலியர்களில் 60 சதவீதத்தினர் வெளிநாட்டவராக இருப்பர்.

சிங்கப்பூரின் செவிலியர் குழுவை அதிகரிக்க அதிகளவிலான வெளிநாட்டவரை வேலையில் சேர்த்தாலும்,பெரும்பாலான செவிலியர்கள் உள்ளூர்க்காரர்களாக இருப்பார்கள்.

செவிலியர் படிப்பின் வழியாகவும் பணி இடைக்காலப் பயிற்சித் திட்டங்கள் வழியாகவும் அவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.செவிலியர்களின் பணிச்சுமையைக் குறைக்க புதிய செவிலியர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

செவிலியர்களை வேலையில் தக்கவைத்துக்கொள்ள அவர்களுக்கு 1.7 முதல் 2.1 மாதங்கள் வரையிலான சிறப்புத் தொகையை அரசாங்கம் வழங்கும் என்று ஜூலையில் அமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.