மூச்சுதிணறும் இந்தியாவுக்கு முதலுதவி செய்யும் சிங்கப்பூர்!

Oxygen

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மூச்சுவிடத் திணறிவரும் இந்தியாவின் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க சிங்கப்பூர் பல வழிகளில் உதவி செய்துவருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு குறுஞ்செய்தியை அனுப்பியதை அடுத்து, இந்தியாவின் ‘மிஷன் ஆக்சிஜன்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

Singapore extends life-line to India in oxygen crisis

மருத்துவ நெருக்கடி காலங்களில் இந்தியாவுக்கு சிங்கப்பூர் ஒரு முக்கியமான உயிர்நாடியாக மாறியுள்ளது. சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் உறைகலன்கள், இந்தியாவின் விமானப்படை விமானத்தில் கொண்டுவரப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள பனாகரா என்ற விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.