சிங்கப்பூரில் திருடப்பட்ட காரை மீட்டுக்கொடுத்த மலேசிய போலீசுக்கு நன்றி தெரிவித்த உரிமையாளர் – “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு”

stolen honda civic type R found

Genting Highlandsஇல் உள்ள SkyAvenue மால் கார் பார்க்கிங்கில் இருந்து ஜூலை 16 அன்று திருடப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஹோண்டா சிவிக் (Type R), ஜூலை 19 மாலை சிலாங்கூரின் செபாங்கில் உள்ள காண்டோமினியம் கார் பார்க்கிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. திருட்டு கார் என தெரியாமல் இருக்க, காரில் பந்தய ஸ்டிக்கர்களை ஒட்டி, சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கார் தகடுக்கு பதிலாக மலேசிய தகடு மாற்றப்பட்டுள்ளது.

செபாங்கில் உள்ள காண்டோமினியத்தின் பாதுகாப்புக் காவலர், சந்தேகத்திற்கிடமான ஹோண்டா சிவிக் (Type R) கார் திருடப்பட்ட நாளான ஜூலை 16 அன்று காலை 6 மணியளவில் காண்டோமினியம் வளாகத்திற்குள் நுழைவதைக் கவனித்ததாக கூறியுள்ளார். காரின் மேற்பரப்பில் ஏராளமான பந்தய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் கவனித்த காண்டோமினியம் பாதுகாப்புக் காவலர் சந்தேகத்திற்கிடமான வாகனம் குறித்து காவல்துறைக்குத் தெரிவித்துள்ளார்.

போலீசார் காண்டோமினியத்திற்கு வந்த பிறகு, அது உண்மையில் திருடப்பட்ட கார் என்பதை உறுதிப்படுத்தினர்.காரை திருடியவர்கள் 18 அங்குல ரிம்கள், ஒலி அமைப்பு மற்றும் கார் கேமராக்களை அகற்றியுள்ளனர் என திருடப்பட்ட காரின் சிங்கப்பூர் உரிமையாளர் டேமியன் கூறியுள்ள நிலையில் தெரியவந்துள்ளது.

மேலும் தனது அன்புக்குரிய காரை தன்னிடம் திருப்பித் தந்த மலேசிய காவல்துறை மற்றும் பொறுப்பான அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் காரின் உரிமையாளர்.