சிங்கப்பூர் மருத்துவமனை, பராமரிப்பு இல்லங்களில் உள்ளோரை பார்க்க தொடரும் தடை!

(Photo: Tan Tock Seng Hospital/ Facebook)

சிங்கப்பூரில் மருத்துவமனை வார்டுகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் உள்ளோரை சென்று பார்க்க தடை தொடரும்.

அதாவது அடுத்த மாதம் ஏப்ரல் 3 வரை தடை இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மார்ச் 18) தெரிவித்தது.

கடந்த மாதங்களாக குடியிருப்புகளில் திடீரென தாக்கும் உலோக பேரிங் மணிகள் – தயாராக இருக்கும் போலீஸ்

“கடந்த வாரத்தில் உள்ளூர் அளவில் COVID-19 பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது.”

இருந்தாலும், சிங்கப்பூர் மருத்துவமனைகள் தொடர்ந்து அதிக அளவிலான நோயாளிகளை சந்திக்கிறது, மேலும் சுகாதாரப் பணியாளர்கள் இன்னும் அழுத்தத்தில் இருப்பதாக MOH செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு பராமரிப்பு இல்லங்களில் விதிவிலக்காக சிலருக்கு அனுமதி உண்டு.

மருத்துவமனைகளில், ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகள், குழந்தை நோயாளிகள் மற்றும் பிரசவம் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்கள் இதில் அடங்குவர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட “இந்திய பயணிகளுக்கு தனிமை இல்லா” பயணம் – விமான சேவை குறித்த முழுமையான விவரம்!