2045-இல் சிங்கப்பூர் இப்படிதான் இருக்குமாம்! – மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அமைச்சகம்

singapore-hot
புவி வெப்பமயமாதல் காலநிலையின் விளைவுகளினால் சிங்கப்பூரில் வெப்ப அலைகள் வீசுகின்றன.சீனா, இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.வெப்பத்தின் தாக்கத்தை சிங்கப்பூர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது பணியிடங்கள் மற்றும் சமூகங்களில் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பது குறித்து பாராளுமன்றத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

புவி வெப்பமயமாதல் தாக்கத்தின் விளைவுகளிலிருந்து சிங்கப்பூர் விடுபடாது என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.2045 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் நாட்களைக் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.வெப்பத்தின் விளைவுகளை மதிப்பிடுதல்,நகர்ப்புற வெப்பத்திற்கு பங்களிக்கும் காரணிகள் போன்றவற்றை காலநிலை ஆராய்ச்சி சிங்கப்பூர் மையம் (CCRS) ஆய்வு செய்து வருவதாக விளக்கினார்.

முதியவர்கள் மற்றும் வெளியே சென்று வெயிலில் வேலை செய்யும் மக்கள் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிப்படைகின்றனர்.எனவே, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) ஒருங்கிணைந்து பணியிடங்களில் வெப்பத்தின் விளைவுகளை ஆய்வு செய்து,பாதுகாப்பு செயல்பாடுகளை உறுதி செய்கின்றன.

சிங்கப்பூரின் குடியிருப்பு பகுதிகள்,பண்ணைகள்,தொழில்துறை தோட்டங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களின் மேற்பகுதியிலும் பசுமையான செடி,கொடிகள் நடப்படுகின்றன.சிங்கப்பூரில் மரங்களை நடுதல் தீவிரப்படுத்தப்படுவதால், அப்பகுதியில் மதிய வெப்பநிலையை 0.9 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும் என்று டான் ஆய்வுகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.