‘இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் முடிவு’- விரிவான தகவல்!

Photo: Wikipedia

 

சிங்கப்பூரில் மின்சார விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிலையான, குடிமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்கும் நோக்கில் சிங்கப்பூர் அரசு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான முயற்சிகளை வரவேற்பதாக சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.

நெருங்கும் பண்டிகைகள்- சென்னை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அதன்படி, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து 4 ஜிகா வாட் மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான டெண்டரை சிங்கபூரின் எரிசக்திச் சந்தை ஆணையம் கோரியுள்ளது. அந்த டெண்டருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 29- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஏற்கனவே, இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு மின்சாரம் கொண்டு செல்ல, அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக கடலுக்கு அடியில் கம்பிவடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் நிலப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சாரத்தை உற்பத்திச் செய்வதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், மின்சார உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்ற நாடாக விளங்கும் இந்தியாவிடம் இருந்து மின்சாரத்தை இறக்குமதிச் செய்ய முடிவுச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் நூலக ஊழியர்கள் மாத சம்பளம் S$6,269… 50 சதவீதம் அதிகரிப்பு

ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மின்சாரத்தை ஏற்றுமதிச் செய்ய இந்திய அரசு, அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் செல்லவிருந்த பயணியை விமான நிலையத்தில் பிடித்த அதிகாரிகள்…. அமெரிக்கா டாலர்கள் பறிமுதல்!

இந்தியாவில் சூரிய ஆற்றல், கற்றாழைகள், கடல் அலைகள் உள்ளிட்ட மரபுசாரா ஆற்றல் மூலம் அதிகளவு மின் உற்பத்திச் செய்யப்பட்டு வருகிறது.