சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூரில் அரசின் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே வரும் நவம்பர் 29- ஆம் தேதி அன்று விமான சேவை தொடங்குகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து விமானங்களை நவம்பர் 29- ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாகவும், இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் விமான நிறுவனங்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, அகமதாபாத், பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு Non- VTL விமானங்கள் இயக்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூர்- மலேசியா நில வழி VTL பயணம்: தினமும் 3,000 பயணிகளுக்கு அனுமதி – டிக்கெட் விற்பனை

இந்தியா, சிங்கப்பூர் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான பயண டிக்கெட் விற்றுத் தீர்ந்ததால் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு பயணிகள் விமான நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளவில்லை என்றால், கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சாங்கி ஈஸ்ட் பணித்தளத்தில் விபத்து: ரோலர் இயந்திரம் கவிழ்ந்ததில் இந்திய ஊழியர் மரணம்

லண்டன், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில், மொரீசியஸ், ஜிம்பாபே போன்ற நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறைக் கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் செலுத்தியிருந்தாலும், தடுப்பூசியை செலுத்தாவிட்டாலும், 72 மணி நேரத்திற்கும் முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருக்க வேண்டும்; கொரோனா பரிசோதனை முடிவில் ‘நெகடிவ்’ இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.