சிங்கப்பூர் தமிழ் ஊழியர்களுக்கு நற்செய்தி… இனி ஒரு நிமிடத்தில் பணத்தை அனுப்ப முடியும்

dbs-ocbc-uob-money-lock-scam-protect
(Photo: Asiaone)

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர், இதனை நாம் அறிந்தது தான்.

அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக சிங்கப்பூரில் வேலை செய்து, அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு தங்கள் குடும்ப பாரங்களை சற்று குறைத்தும் வருகின்றனர்.

ஜூரோங் காபிஷாப்பில் சண்டை: ஆண், பெண் இருவர் கைது

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப குறைந்தது ஒரு நாள் ஆகும். இதை நாம் சில வினாடிகளில் செய்ய முடியும் என்றால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உண்மை.

இதனை சாத்தியமாக கொண்டு வர இந்திய வங்கிகள், சிங்கப்பூர் வங்கிகளுடன் தீவீரமாக பணியாற்றி வருகின்றனர். அவசரமாக பணம் அனுப்ப விரும்பும் ஊழியர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.

இந்திய வங்கியான SBI, ICICI உட்பட 5 இந்திய நாட்டு வங்கிகள், சிங்கப்பூர் DBS வங்கியுடன் இணைந்து தற்போது இந்த சேவையை இந்திய UPI மூலமாக வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதாவது, சிங்கப்பூரின் paynow சேவை மற்றும் UPI சேவை ஆகிவற்றை ஒன்றாக இணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேலைகள் நடந்து வருகின்றன.

இதன் மூலம் தற்போது ஒரு நாளுக்கு மேலாகவும் பணம் அனுப்பும் நடவடிக்கைகளை சில நொடிகளில் செய்ய முடியும். டிசம்பருக்குள் இந்த திட்டம் செயலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த தடை – நிறுவங்களுக்கு இனி கடும் நடவடிக்கை தான்: MOM அதிரடி