இனி கட்டாய PCR சோதனை, ஏழு நாள் தனிமை இல்லை: 14 நாள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் நீக்கியது குறித்து நாம் அறிந்திருப்போம்.

அதாவது, கிருமித்தொற்று ஆபத்து பட்டியலிலிருந்து சிங்கப்பூரை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.

32 நாடுகளுடனான சர்வதேச விமான சேவை தொடரும் – இந்தியா

இந்நிலையில், பயணிகளுக்கு இனி கட்டாய ஆர்டி-பிசிஆர் சோதனை மற்றும் ஏழு நாள் தனிமைப்படுத்தல் இருக்காது.

முன்னர், புதிய COVID-19 மாறுபாட்டான Omicron குறித்த புதிய கவலைகள் காரணமாக அரசாங்கம் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்தது.

தற்போது, அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், திருச்சி மற்றும் சென்னை வரும் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இனி, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவிற்குள் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தை அனுபவிக்க முடியும்.

அவர்கள் செய்யவேண்டியது, 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர்-இந்தியா இடையே VTL சேவை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் ஊழியரணியில் 97 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்