சிங்கப்பூர் இந்தியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை – உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாயும் வழக்கு!

Singapore job scam money mules
File Photo : Singapore Police

29 வயதான சிங்கப்பூர் வாலிபர்  ஒருவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

தனது சுயவிருப்பத்தின் பேரில் தீவிரவாத குழுவில் இணைய சென்றதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவருடைய பெயர் ராஜ்தேவ் லால் மதன் லால் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தடுத்து வைக்கப்பட்டதாக என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.

தளவாட நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்த அவர், கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

டிரினிடாட் டொபேகோவைச் சேர்ந்த தீவிரவாத சமய போதகர் இம்ரான் ஹுசேனின் பேச்சுகளால் மூளை சலவை செய்யப்பட்டார்.

எதிரிகளை ஆயுதம் ஏந்தி கொல்ல  என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக ஆப்கானிஸ்தான் சென்று தாலிபான் அமைப்பில் சேர திட்டமிட்டிருந்தார்.

தன் மனதில் உள்ளதை குடும்பத்தார், நண்பர்கள், ஆகியோருடமும் சமூக ஊடகம் வழியாகவும் பரப்ப முயன்ற போது ராஜ்தேவ் திட்டம் வெளியில் தெரிய ஆரம்பித்தது.

ஆனால் சிங்கப்பூரை தாக்க வேண்டும் என்ற திட்டம் அவரிடம் இல்லை.