சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தேசிய தின விளையாட்டுப் போட்டி – விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர்

singapore indian association celebrate national day edwin tong
சிங்கப்பூர் இந்தியர் சங்கம் ஏற்பாடு செய்த “ரெட் டாட்” விளையாட்டு விழாவில் கலாச்சா,சமூக,இளைஞர் துறை அமைச்சர் எட்வின் டோங் கலந்து கொண்டார்.விழாவில் பங்கேற்ற அவர் “நம் சமூகத்தை ஒருங்கிணைத்து அதற்கு மேலும் வலிமை சேர்ப்பதற்கு விளையாட்டு ஒரு சிறந்த முறை ” என்று கூறினார்.
கடந்த ஆண்டு நடந்த நடைபெற்ற ‘சுசூக்கி’ விளையாட்டின் அரையிறுதியில் சிங்கப்பூர் தோல்வி அடைந்திருந்தது.இருப்பினும் சிங்கப்பூரர்கள் ஒன்று சேர்ந்து தேசிய கீதத்தைப் பாடியதை சான்றாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தாண்டு விளையாட்டை மையமாகக் கொண்டு தேசிய தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்திற்கு அமைச்சர் நன்றி கூறினார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கிய சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் ‘ரெட் டாட்’ விளையாட்டு நான்கு நாட்களுக்கு நடைபெறும்.சிங்கப்பூரின் பாலஸ்டியர் சாலையில் அமைந்துள்ள சங்கத்தின் வளாகத்தில்
கால்பந்து,கிரிக்கெட்,ஹாக்கி,கபடி மற்றும் யோகாசனம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் கிட்டத்தட்ட 700 பேர் கலந்து கொள்கின்றனர்.கபடி இந்தாண்டு முதல்முறையாக சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் விளையாட்டு மையத்தைப் பற்றிப் பேசிய அமைச்சர் டோங்,எதிர்காலத்தில் அதை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.இத்திட்டங்களில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையம்,கால்பந்துப் பயிற்சி மையம்,வலைப்பந்து அரங்கம் போன்றவை அடங்கும்.

‘விளையாட்டை போட்டியாக மட்டும் பார்க்காமல் சமூகத்தில் பிணைப்பை உருவாக்கப் பயன்படுத்துவதும் சங்கத்தின் விருப்பம்” என்று சங்கத் தலைவர் திரு.தமிழ்மாறன் கூறினார்.இவற்றை கருத்தில்கொண்டு நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டான கபடியையும் இந்தாண்டின் நிகழ்ச்சியில் இணைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.