சிங்கப்பூரில் பாதிப்புள்ளாகும் இந்திய உணவகங்கள் – என்னதான் காரணம்?

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டில்
(PHOTO : Shutterstock)

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் பிரபலமான இந்திய உணவகம் ஒன்று இந்த வாரத்தின் இறுதி நாளோடு சப்பாத்தி உணவை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம்.

வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அதோடு மட்டுமல்லாமல், சில இந்திய வகை உணவுகளின் விலையும் அதிகரிக்க பெரிய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த மே மாதத்தில் இருந்து விதிக்கப்பட்ட இந்திய நாட்டின் கோதுமை தடையால் சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் பெரிதும் தடுமாறி வருகின்றன.

இதனால் மூன்று மடங்கு விலை அதிகம் கொடுத்து மற்ற நாடுகளில் இருந்து கோதுமையை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய நாள் வரை விலையை நாங்கள் சமாளித்து வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறோம் என்றும், இனி வரும் நாட்களில் அதிக விலையை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் எனவும் கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த 2 பேர் கைது; வீண் வேலையில் ஈடுபட்டால் கைது உறுதி