இந்திய பயணிகளை ஈர்க்க சிங்கப்பூர் திட்டம்: “தமிழ்நாடு தான் டார்கெட்” – மாஸ் காட்டும் தலைநகர் சென்னை!

Singapore Indian tourists Chennai
Singapore

சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு முயற்சியில் சிங்கப்பூர் சுற்றுலா கழகம் (STB) இறங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை இலக்காக கொண்டு அங்கு, “The SingapoReimagine Reopening campaign”என்ற முயற்சியையும் அது தொடங்கியுள்ளது.

ஊழியர்களின் லாரியின் மீது ஏறி பொருட்களை வீசி தகராறு…போலீசுக்கு திட்டு, உதை – வெளிநாட்டவருக்கு சிறை, அபராதம்!

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மாலில் “Dreams From The Futures” – என்னும் எதிர்காலத்தை மைய தலைப்பாக கொண்ட இந்த பிரச்சாரத்தில் St+art India Foundation அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக STB தெரிவித்துள்ளது.

இதில் சிங்கப்பூர் கலைஞரான டினா ஃபங் மற்றும் அவரது இந்திய இணை கலைஞரான ஓஷீன் சிவா ஆகியோர் இணைந்து இதை செயல்படுத்துகின்றனர் .

மூன்று வாரங்களுக்கு காட்சிக்கு வைக்கப்படும் அந்த நிறுவலில், பாரம்பரிய தமிழர் மற்றும் சிங்கப்பூர் கூறுகளான Peranakan motifs அமைப்புகளும் இடம்பெறும் என்று STB செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய சந்தையாக தென்னிந்தியா இருந்து வருகிறது, கடந்த 2019ஆம் ஆண்டில் சுமார் 1.4 மில்லியன் இந்திய பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

இதனை இந்திய, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கான வட்டார இயக்குனர் திரு ஜி.பி. ஸ்ரீதர் தெரிவித்தார்.

சென்னை, டெல்லி மற்றும் மும்பை மட்டுமல்லாமல் அனைத்து இந்திய நகரங்களுக்கும் VTL திட்டத்தை கடந்த மார்ச் 4 முதல் சிங்கப்பூர் விரிவுப்படுத்தியுள்ளது.

கூடுதலாக இந்தியா வரும் மார்ச் 27 முதல் அதன் சர்வதேச விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

STB-யின் இந்த முயற்சி படிப்படியாக அனைத்து இந்திய நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

கடந்த மாதங்களாக குடியிருப்புகளில் திடீரென தாக்கும் உலோக பேரிங் மணிகள் – தயாராக இருக்கும் போலீஸ்