கொரோனாவுக்கு பிறகு உழைப்போம் என்று பார்த்தால், உயிரை இழக்கிறோம் – உறிஞ்சி குடிக்கும் முதலாளிகள் : வெளிநாட்டு தொழிலாளர்களின் புலம்பல்!

construction worker death
CNA reader

சிங்கப்பூரில் பணியாளர் பற்றாக்குறை மற்றும் கோவிட்-19 பரவல் காரணமாக சமீபத்திய பணியிட விபத்துக்கள் மற்றும் இறப்புகள் உச்ச அளவை எட்டியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மூன்று பேர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2021 முதல் பாதியில் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது.

இதனால் சிங்கப்பூரில் இந்த வருட பணியிட விபத்துகளின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. கொரொனாவிலிருந்து மீண்டு பொருளாதாரத்தை மீட்கவும், சமூக பணிகளை தொடரவும் சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மொத்தம் 37 பணியிட மரணங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இந்த இந்த வருடத்தின் முதல் பாதியிலேயே 27 பணியிட மரணங்கள் நடைபெற்றிருப்பது, பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கவலை எழுப்புவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கூறுகையில், “இதுபோன்ற பணியிட மரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இது யாருடைய அலட்சியத்தால் நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பணியிட மரணங்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. கொரோனாவுக்கு பிறகு தற்போது தான் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், இதுபோன்ற பணியிட மரணங்கள் நிகழ்வது பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக இல்லாததை குறிப்பிடுகிறது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.