இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை
(Photo: TODAY)

வேலையிடத்தில் இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த மூன்று பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மீன் பண்ணையின் நிறுவன இயக்குனர், ஃபோர்க்லிஃப்ட் இயந்திர ஆபரேட்டர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ஆகிய மூவருக்கும் வேலையிட மரணம் தொடர்பான மூன்று தனித்தனி வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. இந்திய ஊழியர்களுக்கு அடிக்கும் அதிஷ்டம்

கிரேன் விபத்து

கிரேன் ஆபரேட்டரான முகமது அஸ்ரஃப் ரோஸ்லி பாதுகாப்பான வேலை நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால், சக ஊழியரான வரதன் பிரபு உயிரிழந்தார்.

இதனால் அஸ்ரஃப்க்கு கடந்த ஆகஸ்ட் 25 அன்று ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் 2020 மார்ச் 11 அன்று நடந்தது. அவர் PSA கார்ப்பரேஷனில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்க்லிஃப்ட் இயந்திர விபத்து

ஏசியாபில்ட் கன்ஸ்ட்ரக்ஷனில் பணிபுரிந்த ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டரான அழகப்பன் கணேசனுக்கு கடந்த ஆகஸ்ட் 15 அன்று 18 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2022 ஜூலை 7 அன்று, ஃபோர்க்லிஃப்ட் சம்மந்தப்பட்ட விபத்தில் சிக்கி குஞ்சப்பா மகேஷ் என்பவர் உயிரிழந்தார்.

MOM மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டரான கணேசன் தன் கடமைகளைச் செய்வதில் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது.

மீன் பண்ணை சம்பவம்

மூன்றாவது வழக்கில், ராயல் கிரவுன் ஃபிஷரி & டிரேடிங்கின் இயக்குநரான சான் நியோக் ஃபோங் தனது கடமைகளை சரியாக செய்யாத காரணத்திற்காக அவருக்கு ஆகஸ்ட் 2 அன்று இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மியான்மர் நாட்டை சேர்ந்த கோ கோ என்ற ஊழியரின் மரணம் தொடர்பில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு பணிப்பெண்ணின் மோசமான செயல்.. அதிர்ச்சியில் நிலைகுலைந்த முதலாளி மகள்