கடலடியில் கண்ணிவெடியைக் கண்டுபிடித்து முறியடிக்க கூட்டுப்பயிற்சி – சிங்கப்பூர் இந்தோனேசிய கடற்படையினர் பங்கேற்பு

Photo: Singapore Navy Official Facebook Page
சிங்கப்பூருக்கு உறைந்த கோழிகளை வழங்க முன்வந்த இந்தோனேசியாவின் கடற்படையும் சிங்கப்பூர் கடற்படையும் இணைந்து கடலுக்கடியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக ஆறு நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டன.இரு நாடுகளின் கடற்படை வீரர்களும் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டனர்.சுமார் 230 கடற்படையினர் பயிற்சியில் பங்கேற்றனர்.

 

கடந்த ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை அன்று சாங்கி கடற்படைத் தளத்தில் தொடங்கிய கூட்டுப் பயிற்சியின் பெயர் ‘ஜாயின்ட் மிநெக்ஸ் பாண்டு’ என்பதாகும்.சிங்கப்பூரின் கடற்பரப்பிலும் இந்தோனேசியாவின் பாத்தாம்,பிந்தான் கடற்பரப்பிலும் நடைபெற்று வந்த பயிற்சி ஆகஸ்ட் 16 அன்று நிறைவடைந்தது.
கடலுக்கு அடியில் வைக்கப்படும் கண்ணிவெடியைக் கூட்டாகக் கண்டுபிடித்து முறியடித்தல்,முக்குளித்தல் மற்றும் கப்பலிலிருந்து அச்சுறுத்தலைச் சமாளிக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றில் இருநாட்டுப் படையினரும் ஈடுபட்டனர்.