சிங்கப்பூரில் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி!

வரும் மார்ச் 4- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் உள் விளையாட்டு அரங்கத்தில் (Singapore Indoor Stadium), இந்திய திரையுலகின் பிரபல பாடகர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்கும் ‘ONCE UPON A TIME’ என்ற இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

வேலை தேடும் இவர்களுக்கு வேலை கொடுத்தால்.. சம்பளத்தில் $600 கூடுதலாக அரசாங்கம் செலுத்தும்…!

இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட்டின் ஆரம்ப விலையாக 55 சிங்கப்பூர் டாலர் முதல் அதிகபட்சமாக 455 சிங்கப்பூர் டாலர் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம்: சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்களில் புதிய நடைமுறை

எனினும், Carousell உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும், டிக்கெட் வெளியிடப்பட்ட ஒரு சில தினங்களில் டிக்கெட் முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும், சிங்கப்பூர் வாழ் தமிழர்களும், ரசிகர்களும் குறைக் கூறியுள்ளனர்.

அதேபோல், அனிருத் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் இன்னும் ஒரு சில நிறுவனங்களின் இணைய தளப்பக்கங்களில் இருப்பதாகவும், அவை மிக அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.