சிங்கப்பூரில் 2025ல் 5ஜி தாெழில்நுட்பச் சேவை!

Photo: Freepik

சிங்கப்பூரில் வரும் 2025ம் ஆண்டு, 5ஜி தாெழில்நுட்பச் சேவை நாடளாவிய முறையில் நடைமுறைப் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி தாெழில்நுட்பத்திற்கான செயலிகள் இப்போதே பரிசோதித்துப் பார்க்கப்படுகிறது.

5ஜி தாெழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதில் திட்டமிட்டதுபோல் நாம் இலக்கை அடைந்து வருகிறோம் என அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட செமி தொழில்துறை குழுமம் நடத்திய மெய்நிகர் மாநாட்டில் அமைச்சர் திரு. கான் தெரிவித்தார்.

கோவிட்-19 தாெற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – இந்த மாதத்தின் 15வது இறப்பு இது

5ஜி தாெழில்நுட்பத்திற்கான அலைவரிசைக் கட்டமைப்புகளும் வரும் 2022ற்குள் பாதி சிங்கப்பூரை உள்ளடக்கி இருக்கும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

ரேசர் தாெழில்நுட்ப நிறுவனம், சிங்கப்பூர் துறைமுக ஆணையம் மற்றும் சிங்டெல் ஆகியவற்றின் திட்டங்களும் இதில் அடங்கும்.

இத்திட்டம் சிங்கப்பூரை முன்னணி மின்னிலக்க நாடாக மிளிரச் செய்யும். இதனால் கணிணிச் சில்லு துறையில் நிறைய முன்னேற்றம் வரும் என்றும், தாெழில் மற்றும் வேலைகளுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கணிணிச் சில்லு துறை உருவாக்கும் பல வாய்ப்புகளை பயன்படுத்தப் போவதாகவும், உயர் தாெழில்நுட்பத்தை உருவாக்கும் உற்பத்தி மையத்தை பலப்படுத்தும் விதமான $25 பில்லியன் ஆய்விற்கான தொழில்துறை 2025 திட்டத்தையும் இந்த ஆண்டில் சிங்கப்பூர் அறிவித்தது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மேலும் 24 பேருக்கு பாதிப்பு