உலகின் மிக பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்: சிங்கப்பூருக்கு எந்த இடம் தெரியுமா?

Singapore second most expensive city

Economist Intelligence Unit’s (EIU) என்றழைக்கபப்டும் பொருளாதார புலனாய்வு பிரிவு நடத்திய ஆய்வில், உலகின் மிக பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் சிங்கப்பூர் தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

ஐந்த கண்டங்களில் 60 நாடுகளில் இருந்து இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. பாதுகாப்பு, டிஜிட்டல், உள்கட்டமைப்பு, ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய அம்சங்களை உள்ளடக்கி ஆய்வு செய்யப்பட்டது.

இதுதவிர அவசர காலங்களில் காட்டப்படும் விரைவு, பேரிடர் கால திட்டங்கள் மற்றும் சைபர் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான உள்கட்டமைப்பு ஆகிய அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டன.

இதில், டோக்யோ நகரம் முதலிடம் பிடிக்க, சிங்கப்பூர் இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. ஒசாகா மூன்றாம் இடத்தையும், ஆம்ஸ்டர்டாம் மற்றும் சிங்கப்பூர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்தன. டொரோண்டோ 6ம் இடத்தையும், வாஷிங்டன் டிசி 7வது இடத்தையும் பிடித்தன.