சிங்கப்பூரில் 882 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு – மேலும் புதிதாக 797 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

Singapore record highest-imported-cases
Andrew Koay via Mothership

சிங்கப்பூரின் நேற்றைய (ஜனவரி 12) நிலவரப்படி, புதிதாக 882 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது, இதில் 396 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

மேலும், 486 பேர் உள்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூகம் மற்றும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவிக்கவில்லை.

ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள்… வெளிநாட்டவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை

கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார், சிங்கப்பூரில் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 839ஆக உள்ளது.

மேலும், மொத்தம் 797 புதிய ஓமிக்ரான் நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 284 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். உள்ளூர் அளவில் 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை (ஜனவரி 12) நிலவரப்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் மொத்தம் 288,125 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விடுதியில் தகராறு: இறந்த தன் தாயை அவமானப்படுத்திய வெளிநாட்டு ஊழியரை குழவி கல்லால் தாக்கிய சக ஊழியருக்கு சிறை