சிங்கப்பூரில் வேலை உறுதி – ஆட்சேர்ப்பு பணியை தீவிரப்படுத்தி வரும் விமான நிறுவனங்கள்

Man responds to job ad offering $150 for painting services, gets arrested

சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு விமான நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளன.கோவிட் தொற்றுக்கு பிறகு விமானப் போக்குவரத்துத் துறை மீட்சியடைவதற்க்கு தயாராகி வருகிறது.சேட்ஸ்உள்ளிட்ட விமான நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

ஆரம்பகட்டமாக சேட்ஸ் நிறுவனத்தின் 600 காலிப்பணியிடங்களில் பெரும்பாலானவை நிரப்பப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விமானத்துறையில் குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே தற்போது ஆள்சேர்ப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தது.பயணச் செயல்பாடுகள்,உணவுத் தயாரிப்பு போன்ற பணிகளுக்கு மட்டுமே தற்போது நிரப்ப உள்ளது.

செர்டிஸ்,ஸ்கூட் ஆகிய நிறுவனங்களும் நூற்றுக்கணக்கில் ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூரில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது.இருப்பினும் விமானத் துறை முழுமையாக மீட்சி அடைய இன்னும் சில காலம் ஆகும்.

தொற்று காரணமாக 35000-க்கும் அதிகமான ஊழியர்களை விமானப் போக்குவரத்துத் துறை இழந்தது.போட்டித்தன்மை நிறைந்த சம்பளம்,செயல்திறன் அடிப்படையிலான வெகுமதிகள் போன்ற ஊக்குவிப்பு மூலம் புதிய பணியாளர்களை ஈர்க்கவும்,ஏற்கனவே உள்ள பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் சேட்ஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

கடந்த டிசம்பரிலிருந்து 250-க்கும் அதிகமான ஊழியர்களை பணியமர்த்திய ஸ்கூட் நிறுவனம்,நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் 900 விமானப் பணியாளர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

தொற்றுக்கு முன்பிருந்த ஊழியர்களுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு இறுதிக்குள் 85 முதல் 90 விழுக்காட்டை எட்ட இலக்கு வைத்துள்ளது.