சிங்கப்பூர் வேலைவாய்ப்பு: புதிதாக 3000 பேருக்கு வேலை ரெடி – பிரெஷர்ஸ்க்கு முன்னுரிமை

singapore jobs
(Photo: Economic Times)

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு: புதிதாக சுமார் 3000 பேருக்கு வேலை தயாராக இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

கணக்கியல் சார்ந்த பெரும் நிறுவனமான Deloitte சிங்கப்பூரில் சுமார் 3,000 புதிய ஊழியர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் பகுதி முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் வளர்ச்சியை இரட்டிப்பாக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதாவது கணக்கியல், வணிகம், பொருளியல் படித்த அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்க அந்நிறுவனம் தயாராக உள்ளது.

அதற்கு தேவையான பயிற்சியையும் அந்நிறுவனமே வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தில் சுமார் 13,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர், சுமார் US$1 பில்லியன் (S$1.3 பில்லியன்) வருவாயை கொண்ட அந்நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ச்சியை இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளது.

மேலும் தகவலுக்கு Deloitte சிங்கப்பூர் இணையதளத்தை பார்வையிடவும்