அடேங்கப்பா! 3 லட்சம் சம்பளமா! – ஆசை காட்டி மோசம் செய்த கோவையைச் சேர்ந்த நபர்

சிங்கப்பூர் பட்ஜெட்
Singapore Jobs

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 170 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.மோசடி குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,கோவை,மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்த புகாரில்,வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனத்தின் மூலம், சிங்கப்பூரில் மாதம் 3 லட்சம் சம்பளத்தில் சிவில் என்ஜினீயர்,பிட்டர்,சூப்பர்விசர் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்தேடுக்கப்படுவதாகவும் தெரிவித்து,விசா போன்றவற்றிற்கு பணம் செலுத்தவேண்டும் என்று கூறி பலரிடம் இருந்து வேலைக்கு ஏற்றார் போல் தொகையை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

இதனை நம்பி ஆண்கள் பெண்கள் என்று பலரும் ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் பணத்தை செலுத்தினர்.மேலும் பணம் செலுத்தியவர்களின் தொலைபேசி எண்ணிற்கு வேலை தயாராகிவிட்டது என்ற போலியான குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து விவரங்களைப் பெற்றுக்கொள்ள ஏஜென்சிக்கு தொடர்புகொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.நேரில் சென்று பார்த்தால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

மோசடியில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் அதிகாரி மோகன கிருஷ்ணன் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.அவரிடமிருந்து சொகுசு கார் மற்றும் மோசடி பணம் 21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.