வந்தால் வேலை கிடைக்குமா? -சிங்கப்பூரின் பல்வேறு ஹோட்டல்களில் காலிப்பணியிடங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

இரண்டு ஆண்டுகள் கோவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த சர்வதேச நாடுகளின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் உணவக துறைகளின் மீட்சிக்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஹோட்டல் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரின் பல்வேறு உணவகங்களில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும் , பணியிடங்களை நிரப்புவது உணவகங்களுக்கு சவாலாக உள்ளது .மேலும், சில வேலைகளுக்கு தகுந்தாற் போல பொருத்தமான ஊழியர்களை நியமிப்பது கூடுதல் சவாலாக உள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரலில் தளர்த்தப்பட்டதிலிருந்து அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கின்றனர். இதனால் உணவு விடுதிகளில் தங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைத் தொடர்ந்து ,சிங்கப்பூரின் பல்வேறு துறைகளிலும் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது .எனவே ,ஆள்பற்றாக்குறை நிலவி வருவதாக மனிதவளத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஊழியர்களை பணியமர்த்துவதில் பல்வேறு துறைகளில் கடும் போட்டி நிலவுகிறது.

கோவிட் தொற்று காரணமாக பல்வேறு உணவக ஊழியர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.சிங்கப்பூரின் விருந்தோம்பல் துறைக்கு ஊழியர்களை மீண்டும் ஈர்க்க, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் உள்ளிட்ட வசதிகளைச் ஏற்படுத்தி தருவது குறித்து உணவு விடுதிகள் பரிசீலித்து வருகின்றன.