700க்கும் மேற்பட்ட முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை வாய்ப்பு!

சிங்கப்பூரில் வேலை தேடும் சிலருக்கு நற்செய்தி: புதிய Work Pass அறிமுகம்
(Photo: MOM/FB)

2020 ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை கிட்டதட்ட 780 முன்னாள் குற்றவாளிகளுக்கு, சிங்கப்பூரின் மஞ்சள் நாடா திட்டத்தின் மூலம் வேலை கிடைத்துள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் அதிகமாக சிங்கப்பூரர்களை வேலைகளில் நியமிப்பதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினால் கிட்டதட்ட 56 சதவீத முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.

மீதமுள்ள 46 சதவீதத்தினரும், இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலைக்கு தகுதி பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் நிறுவனங்களின் உரிமையாளர்கள், அதிகளவில் சிங்கப்பூரர்களை வேலையில் அமர்தாததால் தான் இவர்களுக்கு வேலை இல்லை என்பதும், அரசு இத்திட்டத்தின் வளர்ச்சிக்காக ஒரு பில்லியன் வெள்ளியை சலுகையாக ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு இச்சலுகை வழங்கப்படும்.

இவ்வாறு வேலையில் அமரும் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில், 50 சதவீத தொகையை முதல் 56,000க்கு மட்டும் 18 மாதங்கள் வரை மட்டும் இத்திட்டத்தின் சலுகையால் வழங்கப்படும்.

2020 ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மூன்றில் ஒரு குற்றவாளிக்கு மஞ்சள் நாடா சிங்கப்பூர் திட்டத்தால் வேலை கிடைப்பதாகவும், இதுவரை 96 விழுக்காடு முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துவிட்டதாகவும் திரு.டான் தெரிவித்தார்.