காத்திருக்கும் சிங்கப்பூர்! -சொந்த ஊருக்குச் சென்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திரும்பி வருவார்களா ?

(Photo: AFP/Roslan Rahman)

Covid-19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக நாடுகளுக்கிடையேயான எல்லைகள் மூடப்பட்ட போது, சிங்கப்பூரில் தங்கியிருந்த வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்குச் செல்வதன் மூலம் வெளியேறிவிட்டனர்.இதனால் சிங்கப்பூரின் பெரும்பாலான துறைகளில் வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.தொற்றின் போது வீடு திரும்பியவர்கள் மீண்டும் இங்கு வரமாட்டார்கள்.ஆனால் தொழிலாளர்களின் தேவை அதிகரிப்பதால்,அந்த இல்லாமைகள் மிகவும் தீவிரமாக உணரப்படுகின்றன.

சிங்கப்பூரில் குறிப்பாக ஹவுஸ் கீப்பிங் மற்றும் உணவகங்களில் விருந்தோம்பல் துறை போன்றவற்றில் உள்ளூர் தொழிலாளர்களை சேர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர்.மேலும்,அதிக சம்பளத்தில் கூட இது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளூர்வாசிகள் விரும்பவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூர் நீண்டகாலமாக தனது பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு மனிதவளத்தை பெரிதும் நம்பியிருந்தது. அதிலும் சேவைத் துறை மிகவும் நம்பியிருக்கும் ஒன்றாகும்.2011-ஆம் ஆண்டு சேவைத் துறை நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் அதிகபட்ச சதவீதம் 50 ஆகும்.

விருந்தோம்பல் நிறுவனங்கள் சிறந்த சம்பளத்தை வழங்குவதன் மூலம் வெளிநாட்டு மனிதவளத்தை ஈர்க்க முடியும்.மேலும் சேவைத் துறைகளில் மிகக்கடினமான வேலை நேரம் மற்றும் உடல் உழைப்பு இருப்பதால் உள்ளூர் தொழிலாளர்கள் பணியை விரும்புவதில்லை.எனவே வேலை நேரத்தையும் உழைப்பு சேமிப்புத் திறனையும் முறையாக வகுப்பதன் மூலம் அவர்களை பணியில் ஈடுபடுத்துவது எளிது.