சிங்கப்பூரின் மிகவும் அரிதான நிகழ்வு… கட்டுமான தளத்தை சிதறடித்த “landspout” என்னும் சூறாவளி – Viral Video

strong-winds-changi-construction-site
@yeothuang1968/ TikTok

சிங்கப்பூர்: சாங்கி ஈஸ்ட்டில் உள்ள கட்டுமான தளத்தின் தடுப்புகள் மற்றும் உடைந்த பாகங்கள் பறக்கும் வீடியோக்களை கடந்த ஏப். 30 அன்று நெட்டிசன்கள் சிலர் வெளியிட்டனர். மேலும் அது “சூறாவளி” காற்று என்றும் விவரித்தனர்.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் கட்டுமான தளத்தின் பாதுகாப்பை கூடுதலாக மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கடனை வாங்கிக்கொண்டு சொந்த நாட்டுக்கு ஓட்டம்… Work Permit, புகைப்படத்தை அனுப்பி மிரட்டும் கடனாளிகள் – உயிரிழந்த முதலாளி.. தொடரும் சோகம்

அது ஒரு வகை சூறாவளி என்றும் அல்லது நீர் சுழற்சி என்றும் நெட்டிசன்கள் பலர் அந்த வீடியோக்களின் கமெண்ட் பிரிவில் கருத்துக்களை கூறினர்.

இந்நிலையில், இது மேகங்கள் ஒன்றுகூடுவதால் ஏற்படும் ஒரு வகை சூறாவளி (landspout) என்பதை சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்தபோது, ​​சிங்கப்பூரின் கிழக்கு முனையிலும் கடலோர தீவுகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ததாகவும் ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த நிகழ்வுகள் மிகவும் அரிதானவை என்றும், கடைசியாக இந்த சம்பவம் துவாஸில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவானதாகவும் MSS செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Video:

“ஊழியர்களுக்கு ரோபோ ஒருபோதும் மாற்றாகாது” – சிங்கப்பூர் இணையத்தில் வைரலாகும் வீடியோ