சிங்கப்பூர் கோர்ட்டில் தமிழில் வாதாட முடியுமா? அரசு இந்த மொழிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும்!

Coronavirus tackle measures in Singapore - Tamil medias view

ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும்.

சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களில் சுமார் 100,000 பேர் அல்லது 3 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகின்றனர்.

சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது.

மலாய் தேசிய மொழியாக இருந்தாலும் நடைமுறையில் ஆங்கிலத்துக்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்றவற்றில் மலாய் தேசிய மொழியாக உள்ளதால் அண்டை நாடுகளுடன் சச்சரவுகளைத் தவிர்க்க மலாயை தேசிய மொழியாகக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் அலுவல்கள், வணிகம், கல்வி போன்றவை ஆங்கிலத்திலேயே நடக்கின்றன.

சிங்கப்பூரின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன . நீதிமன்றத்தின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது.

நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் முறையிட வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளர் தேவை.

20 விழுக்காடு சிங்கப்பூர் மக்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவோ எழுதவோ தெரியாது. 2010ம் ஆண்டு கணக்கின்படி 71 விழுக்காடு மக்களுக்கு இரண்டு அல்லது அதற்கு அதிகமான மொழிகள் தெரியும். சிங்கப்பூரில் பெரும்பான்மை, அதாவது பாதி மக்களின் மொழியாக சீனம் உள்ளது.

ஆரம்ப, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்விக்கு பெரும்பாலும் அரசு துணைபுரிகிறது. அனைத்து தனியார் மற்றும் பொதுக் கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகக் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அரசு பள்ளிகளின் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. “தாய் மொழி” தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதுடன் தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடாத்தப்படுகின்றன.