உறுதியாக உயரும் GST – சிங்கப்பூரர்களின் அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்?

Citing Singapore model, experts bat for cutting multiple GST rates in India.

சிங்கப்பூரின் துணைப்பிரதமர் மற்றும் நிதியமைச்சருமான லாரன்ஸ் ஒங் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய போது ,அரசாங்கம் பணவீக்கத்தை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும் தேவை ஏற்பட்டால் $6.6 பில்லியன் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

GST வரி உயர்த்தப்படவுள்ள நிலையில்,அது குடும்பங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உத்தரவாதத் தொகுப்புத்திட்டம் இலக்குக் கொண்டுள்ளது.

பணவீக்க நெருக்கடிக்கு மத்தியில் , சிங்கப்பூரர்களின் குடும்பங்களுக்கான அரசாங்கதின் ஆதரவு நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் கேட்டிருந்த நிலையில் ,நேற்று அவர் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

சிங்கப்பூரில் பணவீக்கத்தின் அளவைப் பொறுத்து,தொகுப்புத் திட்டம் போதுமானதாக இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வோம்.தேவை ஏற்படின் அத்திட்டத்தை மேலும் மேம்படுத்துவோம் என்று விளக்கமளித்தார்.

மூத்தகுடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில்,மருத்துவச் செலவினங்களை எதிர்கொள்ளவும் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும் அவசரமாக நிதி தேவைப்படுவதால் ,இன்னும் GST உயர்வைத் தள்ளிப் போடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

வரி உயர்வினால் சிங்கபூரர்களின் குடும்பங்கள் மீது ஏற்படும் தாக்கத்தைத் தணிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.இந்த நிதியுதவியின் விளைவாக குறைந்த வருமானக் குடும்பங்கள் சுமார் பத்தாண்டுகளுக்கு வரி உயர்வின் தாக்கத்தை உணர மாட்டார்கள் என்று கூறினார்

இந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி,GST உயர்த்தப்பட வேண்டியது அவசியம் என்றும் பணவீக்கம் உயரும் என்றும் அரசாங்கம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததாக அவர் கூறினார்.தொழில் நிறுவனங்கள் செயல்திறன்களை வளர்த்துக்கொள்ளவும்,உற்பத்தித்திறன் மிக்கதாகவும் உருவெடுக்க ஊக்குவிப்பதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத்தின் நிதியுதவித் தொடரவேண்டும் என்று அவர் விளக்கினார்.