Omicron வைரஸ் தொற்று குறித்த முழு விவரங்கள் தெரியாததால் கட்டுப்பாடுகள் தேவை இல்லை – சிங்கப்பூர்

LIANHE ZAOBAO

வீரியம் மிக்க Omicron Covid-19 மாறுபாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் எல்லை கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன.Omicron வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூர் தனது எல்லை கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. நிதியமைச்சர் லாரன்ஸ் ஓங் உள்ளூர் கட்டுப்பாடுகளில் தற்போது எந்த மாற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஓமிக்ரான் மாறுபாடு கொரானா தொற்றின் உருமாறிய திரிபுகளின் இறுதி மாறுபாடாக இருக்காது. மேலும் பல புதிய உருமாறிய மாறுபாடுகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள omicron மாறுபாடு குறித்து முழுமையான விவரங்கள் வெளிவராத நிலையில் உள்ளூரில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தேவையானதா என்று இப்போது அறிவிக்க இயலாது என்றும் அமைச்சர் லாரன்ஸ் கூறினார்.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாமல் போகக்கூடிய அளவிற்கு புதிய கொரோனா திரிபுகள் உருவாகக்கூடும். தொடர்ந்து உருவாகும் எல்லாத் திரிபுகளுக்கும் ஒரே தீர்வு இல்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப சிங்கப்பூரர்கள் தங்களது மனப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

” மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொண்டு ,அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வைரஸ் தொற்றுக்கு எதிரான போரின் தனது பங்கினை ஆற்ற வேண்டும் ” என்று covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான பணிக்குழுவின் துணைத் தலைவரான லாரன்ஸ் கேட்டுக்கொண்டார்.

உலக சுகாதார அமைப்பினால் கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கப்பட்டுள்ள omicron மாறுபாட்டில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.