ஊழியர்களை வேலையை விட்டு நீக்க தயாராகும் சிங்கப்பூரின் முக்கிய நிறுவனம்

lay off workers
(Photo: CNBC)

தென்கிழக்கு ஆசிய இணைய வணிக நிறுவனமான Shopee, தனது ஊழியர்கள் சிலரை வேலையில் இருந்து நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம், ShopeeFood மற்றும் ShopeePay குழுக்களில் பணிபுரியும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளது.

வேலையிடங்களில் சாதாரணமாக ஏற்படும் உயிரிழப்புகள்: இனி ஊழியர்களுக்கு நல்ல செய்தி தான்

மேலும் மெக்ஸிகோ, அர்ஜென்டினா மற்றும் சிலியில் உள்ள அதன் குழுவின் ஒரு பகுதியையும், ஸ்பெயினில் சந்தையை ஆதரிக்கும் எல்லை தாண்டிய அணியையும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Shopee தலைமை நிர்வாகி கிறிஸ் ஃபெங் இதுபற்றி கூறுகையில், “சில பிரிவுகள் மற்றும் சந்தைகளில் தங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த சில மாற்றங்களைச் செய்து வருகிறோம்” என்றார்.

கடந்த மார்ச் மாதத்தில் இந்திய சந்தையிலிருந்தும் Shopee நிறுவனம் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Suntec City மொத்த தளத்தையும் வாங்கிய வெளிநாட்டவர் – கொடுத்த தொகை $38.8 மில்லியனாம்!