வண்ண விளக்குகளால் ஒளிரும் சிங்கப்பூர்!

Photo: Singapore Prime Minister Official Twitter Page

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ‘ஹைலைட் சிங்கப்பூர் 2022’ என்ற ஒளி ஓவிய விழா தொடங்கியுள்ளது. இதையொட்டி, சிங்கப்பூரில் உள்ள மெரினா பே உள்ளிட்ட முக்கிய இடங்கள் வண்ண மின்விளக்குகளால் ஒளிர்கிறது. அதேபோல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அலங்கரிக்கப்பட்டுள்ள வண்ண மின்விளக்குகளைக் கண்டு ரசித்தும், அதனை புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

சிங்கப்பூரின் இந்திய வர்த்தக தொழில் சபையின் புதிய தலைவர் யார் தெரியுமா? – இரண்டு பெண் உறுப்பினர்களை நியமித்த சிக்கி

இதில் சுற்றுச்சூழல் குறித்து விழுப்புணர்வை ஏற்படும் வகையில், திமிங்கலம் ஒன்று வண்ண மின்விளக்குகளால் ஒளிர்கிறது. கடலில் நெகிழி பொருட்களைத் திமிங்கலம் உண்பதால், ஏற்படும் பாதிப்பை உணர்த்தும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளது. திமிங்கலத்தின் உள்ளே சென்று நெகிழி கழிவுப் பொருட்களை பொதுமக்கள் பார்த்து, அதன் பாதிப்பின் தீவிரத்தை உணரலாம். இந்த வண்ணமயமான விளக்குகளின் திருவிழா, வருகிற ஜூன் 26- ஆம் தேதி அன்று வரை நடைபெறவுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாடு – உக்ரைன் அதிபர் மெய்நிகர் வாயிலாக உரை

இந்த விழா காரணமாக, சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கரோனா காரணமாக, இவ்விழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.