சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் இந்த வருட தீபாவளி பண்டிகை அலங்கரிப்பு எவ்வாறு அமைய வேண்டும்?

சிங்கப்பூர் LISHA அமைப்பினர் குழு ஒன்றை அமைத்து ஒவ்வொரு வருடமும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு அலங்கரிப்பு (theme) ஒன்றை தேர்வு செய்துவருகிறார்கள்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்கவர் அலங்கரிப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தீபாவளி கொண்டாட்டங்களுக்கு என்ன வகையான தீம் (theme) எதிர்பார்க்கிறீர்கள்? என்பது குறித்து பொதுமக்களுக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீங்கள் விரும்பும் தீம் குறித்த கருத்துகளையும், அது எப்படி அமைய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தையும் Comment இல் பதிவு செய்யலாம் அல்லது LISHA -வை தொடர்பு கொண்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.