சிங்கப்பூரில் 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் – என்ஜாய் பண்ணுங்க

2024 public-holiday-singapore
Photo: holidify

சிங்கப்பூரில் இந்த 2023 ஆம் ஆண்டு மேலும் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது முழுமையாக ஏழு நீண்ட வார இறுதி நாட்களை நீங்கள் அனுபவிக்கலாம்.

விசாக தினத்திற்கான தேதி இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வருவதாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஏழு நீண்ட வார இறுதியாக அது மாறியுள்ளது.

மீண்டும் முதல்ல இருந்தா… சிங்கப்பூர்-இந்தியா பயணிகளுக்கு தான் கடும் நடைமுறை – NEW Update

இந்த அறிவிப்பை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) முன்னர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் சீன-மேற்கத்திய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் விசாக தினம் ஜூன் 3 அன்று வரும் என்று சிங்கப்பூர் பௌத்த கூட்டமைப்பு (SBF) அறிவுறுத்தியது.

ஆனால், பொதுமக்களின் கருத்தை தொடர்ந்து விசாக தினம் ஜூன் 2, 2023 அன்று வரும் என்று மற்ற சீன பஞ்சாங்கங்களுடன் SBF சரிபார்த்து இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஆகவே நீங்கள் உங்கள் விடுமுறை திட்டத்தை இப்போதே போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

“எங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தான் முக்கியம்…” – சிக்கிய கட்டுமான நிறுவனம்