Singapore 4D டிராவில் முதல், மூன்றாம் பரிசுக்கு ஒரே வெற்றி எண்… துள்ளிக் குதித்தவருக்கு கடைசியில் இருந்த ட்விஸ்ட்

lottery-4d-repeated-number

Singapore Pools: சிங்கப்பூர் 4D லாட்டரி குலுக்கலில் பரிசு வென்ற முதல் மூன்று எண்களில் இரண்டில் ஒரே எண் தோன்றுவது சாத்தியமா? என்ற கேள்வி நம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

அப்படிபட்ட சம்பவம் ஒன்று தான் தற்போது நடந்துள்ளது. முதல் பரிசு மற்றும் மூன்றாம் பரிசுக்கு ஒரே வெற்றி எண்கள் காட்டப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற மொபைல் செயலியான Live4D.sg இல் சில பயனர்களுக்கு மே 14 அன்று அவ்வாறு ஒரே எண்கள் காட்டப்பட்டதாக கூறியுள்ளனர்.

லாபத்தில் சாதனை படைத்த “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” – 76 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதன்முறை

இது சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இந்த குழப்பமான நிகழ்வு, “2017 不吐不快” என்ற குழுவில் Yeo என்பவரால் அதே நாளில் இரவு சுமார் 8:42 மணியளவில் பகிரப்பட்டது.

முதல் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு ஆகிய இரண்டிற்கும் 9250 என்ற வெற்றி எண் மீண்டும் மீண்டும் அந்த செயலியில் பார்த்ததை ஸ்கிரீன்ஷாட் மூலம் Yeo வெளிக்காட்டினார்.

ஆனால் அதன் பின்னர் அந்த செயலியில், முதல் மூன்று வெற்றி எண்கள் முறையே 1401, 6867 மற்றும் 9250 என காட்டப்பட்டது.

உண்மையான எண்

சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) இணையதளத்தின்படி, முதல் பரிசுக்கான உண்மையான எண் 1401 ஆகும்.

லாட்டரியின் வெற்றி எண்களை குறிப்பதில் ஊழியர் ஒருவர் தவறு செய்துவிட்டார் என Live4D.sg செய்தி தொடர்பாளர் கூறினார்.

“ஊழியர்கள் தவறை உணர்ந்த பிறகு, அது உடனடியாக சரிசெய்யப்பட்டது,” அவர் ஷின் மின் செய்தியுடன் பகிர்ந்து கொண்டார்.

4D டிராவில் இரண்டு முறை ஒரே எண் வருவது இதற்கு முன் நடந்துள்ளது, ஆனால் முதல் மூன்று பரிசுகளுக்கு அவ்வாறு நடந்தது இல்லை.